Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, April 5, 2017

நீர்கொழும்பு கொச்சிக்கடை கடற்பகுதியில் நீராடச் சென்ற மாணவர் பலி

நீர்கொழும்பு  கொச்சிக்கடை கடற்பகுதியில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நேற்று புதன்கிழமை (5)  பகல் பலியாகியுள்ளார்.
நான்கு மாணவர்கள் கடலில் நீராடச் சென்ற நிலையில் ஒரு மாணவர் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
கட்டானை கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த ஏத்கால பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்களப் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி பயிலும் கொச்சிக்கடை ஏத்கால. சமகி  மாவத்தையில் வசிக்கும் 15 வயதுடைய நிபுன் ரொஸான் பெர்னாந்து புள்ளே
என்ற மாணவரே மரணமடைந்தவராவார்.
 பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment