ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த
பாகிஸ்தான் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (14) காலை 9 மணியளவில் சுங்க அதிகாரி;கள்
கைது செய்துள்ளதுடன் போதைப் பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஈ. கே. 650 இலக்க விமானத்தில் கராச்சியிலிருந்து டுபாய் வழியாக
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த குறித்த
பாகிஸ்தான் பிரஜையே கைது செய்யப்பட்டவராவார்.
சந்தேக நபர் தனது பாதணிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து போதைப் பொருளை நாட்டுக்கு கடத்தி வந்த நிலையில்
விமான நிலைய சுங்க போதைப் பொருள் பிரிவினர்
அவர் மேல் சந்தேகம் கொண்டு சோதனை செய்துள்ளனர். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான போதைப்
பொருளை சந்தேக நபர் கடத்தி வந்துள்ளமையை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளின் விசாரணையின் பின்னர்
சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
No comments:
Post a Comment