நீர்கொழும்பு
சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகள் இன்று
(30-5-2017) அதிகாலை 1.30 மணியளவில் தப்பியோடியுள்ளனர்.
சிறைச்சாலையின் முன்பக்கமாகவுள்ள மதிலை உடைத்துக்
கொண்டு கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிய வருகிறது. அந்த மதிலில் ஒன்றரை அடி துளையை (ஓட்டையை) எற்படுத்தி இவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியுள்ள
கைதிகள் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றம்
சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வருபவர்களாவர். அவர்களில் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டுள்ளவராவார்.
சத்துர
மதுசங்க (25 வயது), விபுல சுரங்க முனசிங்க (19 வயது), பி. ஜயகுமார். (26 வயது), மொஹமத்
நவுபர் தவுபீக் முஹம்மத் நஸீம் (26 வயது) ஆகியோரே தப்பியோடியுள்ள இளம் கைதிகளாவர்.
தப்பியோடியுள்ள கைதிகள் வத்தளை, குருணாகலை, யாழ்ப்பாணம் மற்றும் நாவலபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்
என பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு
பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்

No comments:
Post a Comment