கல்விக் கண்காட்சி இன்று (29) காலை கல்லூரி அதிபர் புவணேஸ்வர ராஜா தலைமையில் ஆரம்பமானது.
இன்று (29.05.2017) திங்கட்கிழமை ஆரம்பமான கண்காட்சியின் போது நீர்கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பி.சி.பி.
பெர்ணான்டோ பிரதம விருந்தினராகவும் , தொழிலதிபர் பி. பரத்குமார் விசேட விருந்தினராகவும்
கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப பிரிவு, இடைநிலைப் பிரிவு, உயர்தரப் பிரிவு என மூன்று பிரிவுகளாக கண்காட்சியில் மாணவர்களின்
ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி இரண்டாவது
நாளாக நாளை (30.05.2017 அன்று) செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்
No comments:
Post a Comment