கட்டானை பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட கட்டானை தெமங் சந்தியில்
இடம்பெற்ற வாகன விபத்தில்விமானப்படை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இன்னொருவர்
காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (5-62017) நள்ளிரவு
12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளிலுடன் எதிரே வந்த கார் மோதி இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம்
செய்த ருவன் கருனாரத்ன என்ற 28வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே சம்பவத்தில் ஸ்தலத்திலேயே பலியானவராவார். இவர் விமானப்
படையில் பணியாற்றுபவராவார். மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் காயமடைந்தநிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரை செலுத்தி
வந்த மடம்பெல்ல தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த
டி.பி. தனுஸ்க விக்ரம சூரியஎன்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கட்டானை
பொலிஸார்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment