Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, June 6, 2017

நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகரித்த டெங்கு நோயாளிகள்: ஒரு கட்டிலில் இரண்டு நோயாளிகள்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இன்றைய தினம் நான்காம்; இலக்க வார்டில் 160 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஆயினும் 61 கட்டில்களே அந்த வார்டில் உள்ளன. அனுமதிக்கப்பட்டவர்களில்  அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களாவர்.  இ;ந்த வார்ட் ஆண்கள் அனுமதிக்கப்படும்  வார்டாகும். இந்நிலையில்  ஒரு கட்டிலில் இரண்டு பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் 24 தாதியர்களே இந்த வார்டில் பணியாற்றுகின்றனர். ஆளணி குறைப்பாட்டினாலும்   இடவசதி குறைவினாலும்  வைத்தியசாலையில் பணியாற்றுவோரும்
, நோயாளிகளும் பெரும் அசௌகரியங்;களை எதிர் நோக்கியுள்ளனர்.  பெண்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுகின்ற  3 ஆம் இலக்க வார்டிலும், சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 8 ஆம் இலக்க வார்டிலும் இதே நிலை காணப்படுகிறது. 
 3 ஆம் இலக்க வார்டில் இன்றைய தினம் 145 நோயாளிகளும், 8 ஆம் இலக்க வார்டில் இன்றைய தினம் 111 நோயாளிகளும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் அதிகமானோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், என்றுமில்லாதவாறு தற்போது நோயாளிகள் அதிகரித்துள்ளதாகவும், வைத்தயசாiலியல் மொத்தமாக 309 தாதியர்கள் பணியாற்றி வருவதாகவும்,   வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் நிலந்தி பத்திரன தெரிவித்தார்
டெங்கு காய்ச்சலினால் கடந்த மூன்று மாத காலத்தில் 5 பேர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சு  இந்த விடயத்தை கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே சகலரதும் கோரிக்கையாகும்.



No comments:

Post a Comment