Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 12, 2017

பெரஹரவில் பங்குபற்றிய யானை தாக்கியதில் பௌத்த தேரர் பலி கட்டானையில் சம்பவம்

கட்டானை ஸ்ரீ வர்தனாராம விகாரையின்; பொசன் பெரஹர இடம் பெற்ற போது பெரஹரவில் கலந்து கொண்ட யானை  தாக்கியதில் பௌத்த தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம்  இன்று திங்கட்கிழமை  (12) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கரம்பே ராஹுல தேரர் (26 வயது) யானை தாக்கியதில் இறந்தவராவார்.
யானை குழப்பமடைந்ததை அடுத்து மக்கள் ஓட்டம் எடுத்த போது மரணமடைந்த தேரரை யானை தும்பிக்கையால் இழுத்து கீழே வீழத்தி காலால் மிதித்துள்ளது.
பெரஹர சென்று கொண்டிருந்தபோது குறித்த தேரர் யானையின் வலது பக்கமாக முன்னால் சென்று கொண்டிருந்த போது சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தை அடுத்து காயமடைந்த தேரரரை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தேரரின் சடலம்  நீர்கொழும்பு வைத்தியசாலையில்  பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







No comments:

Post a Comment