காலில்
ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சைப் பெறுவதற்காக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
நீர்கொழும்பு சிறைச்சாலையைச் சேர்ந்த கைதி ஒருவர்
இன்று (12) அதிகாலை அங்கிருந்து தப்பிச்
சென்றுள்ளார்.
வல்பொல
, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த கைதியே தப்பிச்
சென்றவராவார். இவருக்கு எதிராக கொள்ளை உட்பட எட்டு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருகின்றது. சிறைச்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் இருக்கும்
போது குறித்த கைதி தப்பியோடியுள்ளார்.
இதேவேளை
நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கடந்த மாதம் 30 ஆம் திகதி நான்கு கைதிகள் தப்பியோடியமை
குறிப்பிடத்தக்கது. இவர்கள் அதிகாலை 1.30 மணியளவில் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த
அறையின் சுவற்றிலும் பின்னர் மதிலின் சுவற்றிலும்
துளையை ஏற்படுத்தி தப்பிச் சென்றனர்.
இதனை
அடுத்து சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம்,
புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன கைதிகள் தப்பியோடியமை
தொடர்பாக முழுமையான அறிக்கை கோரப்படவுள்ளதாகவும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்று இரண்டு வார காலத்தில்
மற்றொரு கைதி தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment