Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 12, 2017

நீர்கொழும்பு, லாஸரஸ் வீதியில் குப்பைகள் அகற்றப்படாமை தொடர்பாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்லையில், லாஸரஸ் வீதி ஓரமாக குவிக்கப்பட்டுள்ள குப்பைக் கூலங்களை கடந்த ஒரு மாத காலமாக நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினர் அகற்றாமை தொடர்பாக பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பிரதேசவாசிகள் தெரிவிக்கையில்,
கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக வீதியோரமாக குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. வடிகானில் குப்பைகள் விழுந்து நீர்தேங்கி காணப்படுகின்றன. இது தொடர்பாக மாநகர சபையின் கழிவகற்றும் டிரக்டரில் வரும் ஊழியர்களிடம் கேட்டால் , அதுபற்றி எமக்குத் தமக்குத் தெரியாது, இங்கு போடப்படும் குப்பைகளை
அகற்றக் கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். இங்கு மழை போன்று குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. பிரதேசவாசிகள்  குப்பைகளை தரம் பிரித்து இங்கு போடுகின்றனர். ஆயினும், இரவு வேளைகளில வேறு இடங்களில் இருந்து வருவோர்; இங்கு குப்பைகளை போட்விட்டுச் செல்கின்றனர். நீர்கொழும்பு வைத்தியசாலை டெங்கு நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். பெரியமுல்லை பிரதேசத்திலும் அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநகர சபையின் ஆணையாளர் உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டி ஏற்படும் என்று தெரிவித்தனர்.



 நாம் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மாநகர சபையின் குப்பைகளை அகற்றும் டிரக்டர் அங்கு வந்த போதும் அங்கிருந்த குப்பைகளை அகற்றவில்லை. காரணத்தை நாம் கேட்டபோது, இங்குள்ள குப்பைகளை அகற்ற வேண்டாம் என தமக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 பொது மக்கள் குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவதற்காக வைக்காமையே இந்த பிரச்சினைக்கு காரணம் எனத் தெரிய வருகிறது.
இதேவேளை,  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 1100 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர்; நிலந்தி பத்திரன தெரிவித்தார்.


No comments:

Post a Comment