Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 19, 2017

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மேல் மாகாண சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை பார்வையிட மேல் மாகாண சுகாதார அமைச்சர்  சுமித் லால் மென்டிஸ் இன்று திங்கட்கிழமை (19) முற்பகல்  வைத்தியசாலைக்கு திடீர் விஜயம்  மேற்கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரண, மேல் மாகாண சபை  அமைச்சர் லலித் வணிகரத்ன, மேல் மாகாண சபை  உறுப்பினர்களான ரொயிஸ் பெர்னாந்து, ஷாபி ரஹீம், எம்.எஸ்.எம். சகாவுல்லா, ரோஸ் பெர்னாந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள், வைத்தியசாலை கமிட்டியின் முக்கியஸ்த்தர்கள், மாநகர சபையின் அதிகாரிகள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல் மாகாண சுகாதார அமைச்சர்  சுமதி லால் மென்டிஸ் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நேரில் பார்வையிட்டார்.

அங்கு இடம்பெற்ற சந்திப்பின்போது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை வைத்தியசாலையின் பணிப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். குறிப்பாக டெங்கு நோயாளர்கள் அதிக எண்ணிக்கையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலைமையையும், வைத்தியசாலைக்கு தேவையான ஆளனியினர் மற்றும்  உபகரணங்கள், இடநெருக்கடி மற்றும் கடந்த ஒருவருட காலத்திற்கு மேலாக புனரமைப்பு   செய்யப்பட்டு வரும் வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடிடம் விரையில் புனரமைப்பு செய்யப்பட வேணடியதன் அவசியம் தொடர்பாகவும் பணிப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார்.





வைத்தியசாலையின் கட்டட புனரமைப்பின்போது  300 மில்லியன் ரூபா நிதி  தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக அங்கு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் வைத்தியசாலை கமிட்டியினால் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
அமைச்சர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,





ஒரு மாத காலத்திற்குள் வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான தீர்மானங்களை எடுத்து அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும்,  வைத்தியசாலையின் கட்டட புனரமைப்பின்போது  ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக மாகாண சபையினால் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், நீர்கொழும்பு வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழு; கொண்டு வருவதற்கு தான் இணக்கம் தெரிவிப்பதாகவும் , சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் அதற்கு இணக்கம் தெரிவிப்பார் எனவும் அமைச்சர் உடகங்களுக்குத் தெரிவித்தார்.


 படப்பிடிப்பு - எம்.இஸட். ஷாஜஹான் 

No comments:

Post a Comment