Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, June 19, 2017

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் 600 பேர் : கட்டில்கள் 200

 நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் 600 பேருக்கு மேல் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதாகவும், இடவசதியின்மை , கட்டில்களின் எண்ணிக்கை போதாமை  காரணமாக நோயாளிகள் நிலத்தில் இருப்பதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரன  தெரிவித்தார்.
 இது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த வருடம் 1084 டெங்கு நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த வருடம் இன்றைய திகதி வரையில் 3790 டெங்கு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40 வீதமானவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள். மூன்ற வார்டுகளில் சிறுவர், பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கியிருந்த சிகிச்சைப் பெற்று வருகின்றனர், 200 கட்டில்களே உள்ளன. ஆயினும் தற்போது 600 இற்கும்
மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தாதியர்களின் பற்றாக்குறை, வைத்தியர்களின் பற்றாக்குறை உள்ளது. ஏனைய வார்டுகளிலும் டெங்கு நோயாளிகளை அனுமதிக்க திட்டமிட்டுள்ள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இடவசதியின்மை, கட்டில்கள் இன்மை காரணமாக  நோயாளிகள் பல்வேறு கஸ்டங்களை அனுபவிப்பதாகவும், ஒரு கட்டிலில் இரண்டு பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் வார்டில் ஒரு கட்டிலில் 3 பேர் தங்க வைக்கப்பட்டு;ள்தாகவும், வைத்தியர்களும், தாதியர்களும் அர்ப்பணிப்புடன் சேவை புரிவதாகவும்   நோயாளிகளும் பொது மக்களும்; தெரிவிக்கின்றனர்.

 வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் எதிர்நோக்கும்   பிரச்சினையை சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார அமைச்சு தீர்த்து வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சகலரதும் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment