Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, July 29, 2017

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நீர்கொழும்பு நகரில் வடிகான்களுக்கு கடல் நீர் ஊற்றப்பட்டது

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்காக நீர்கொழும்பு  நகரின்; சில பிரதேசங்களில்  உள்ள வடிகான்களில்  இன்று சனிக்கிழமை (29)  கடல் நீர் ஊற்றப்பட்டது.
மேல் மாகாண சபையின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளருமான ரொயிஸ் பெர்னாந்துவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அதற்கு முன்னதாக நீர்கொழும்பு கடோல்கலே சரத் சந்த்ர விளையாட்டரங்கில்  டெங்கு ஒழிப்பு தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து,  பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா, கத்தோலிக்க மதத் தலைவர்கள், நீர்கொழும்பு
மாநகர ஆணையாளர், நீர்கொழும்பு பிரதேச செயலாளர், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸார், சிவில் பாதுகாப்பு  படையினர், தேசிய இளைஞர் சேவை மன்ற அங்கத்தவர்கள், கிராம சேவகர்கள், பொது சுகாதார பிரிவு அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் மூன்று குழுக்களாகப் பிரிந்து  சென்று டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும், அதிலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாக எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும்  பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்து.
இதன் ஒரு வேலைத் திட்டமாக போலவலான, குரணை, கடோல்கலே பிரதேசங்களில் உள்ள வடிகான்களில் நுளம்பு குடம்பிகள் உருவாகாத வகையில் கடல் நீரை கலக்கும் பணி இடம்பெற்றது. இதற்கு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் பென்ஞமின் கிஹான் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.
குறைந்த செலவில் நுளம்புகளை அழிக்கும் இந்த வேலைத்திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து தெரிவித்தார்.
  
 











No comments:

Post a Comment