டெங்கு
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 5 வயது சிறுமி
ஒருவர் வியாழக்கிழமை (27) மாலை 6 மணியளவில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி மரணமாகியுள்ளார்.
நீர்கொழும்பு
லாஸரஸ் வீதியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சிறுமியே மரணமடைந்தவராவார்.
சம்பவம்
தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
மரணமடைந்த
சிறுமி; பாலர் பாடசாலையில் கற்கும் மாணவியாவார்.
இவருக்கு 3 வயதில் சகோதரர் ஒருவர் உள்ளார். சில தினங்களுக்கு முன்னர் சிறுமி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பெரியமுல்லையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில்
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை
மாலை கடும் சுகயீனமுற்ற நிலையில் சிறுமி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமாகியுள்ளார்.
சிறுமியின்
சடலம் நேற்று வெள்ளிக்கிழமை உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டது.
இதேவேளை,
நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட
பிரிவில் இந்த வருடம் 3000 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் கண்டு பிடிக்கப்பட்டதாக
நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment