டெங்கு
நோயை ஒழிக்கும் முகமாக ஆசி வேண்டி நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட
பிரார்த்தனையும் ஹோமமும் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) காலை நடைபெற்றது.
ஸ்ரீ
சித்தி விநாயகர் ஆலயத்தின் சிவஸ்ரீ குகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
கோயில் நிருவாகிகள், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்தி
குழு உறுப்பினர்கள், நீர்கொழும்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்;, நகர முக்கியஸ்த்தர்கள்
உட்பட பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கடந்த
50 வருடங்களுக்கு முன்பாக அம்மை நோயிலிருந்து
பாதுகாப்பு வேண்டி விசேட பிரார்த்தனையும் ஹோமமும் இடம்பெற்ற பின்னர் தற்போது டெங்கு
காய்ச்சலிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி விசேட பிரார்த்தனையும் ஹோமமும் இடம்பெறுவதாக
கோயில் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்தனர்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்



No comments:
Post a Comment