Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 6, 2017

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழச்சி - வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரண தெரிவிப்பு

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி   ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரண  இன்று (5)  தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது வைத்தியசாலையில் 250 டெங்கு நோயாளிகளே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். முன்னர் 700 வரையான டெங்கு நொயாளிகள் சிகிச்;சைப் பெற்று வந்தனர். இதன் காரணமாக பெரும் இடநெருக்கடி காணப்பட்டது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு  வேலைத் திட்டங்கள் வெற்றியளித்துள்ளன.

தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் ஏழு மாடிக் கட்டடிடத்தில் மேலும் இரண்டு டெங்கு வார்டுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த கட்டடத்தில்  உள்ள வார்டுகளில் மொத்தமாக 240  டெங்கு நோயாளிகள் சிகிச்சைப் பெறலாம். என்றார்.

முன்னர் ஒரு கட்டிலில் இரண்டு டெங்கு நோயாளிகள் தங்கியிருந்த நிலையில் தற்போது ஒரு கட்டிலில் ஒரு நோயாளியே தங்கியுள்ளார். அத்துடன்  19 ஆம் 20 ஆம் இலக்க வார்டுகளில் பல கட்டில்கள்  வெறுமையாக இருப்பதை அவதானிக்க முடிந்தது.

No comments:

Post a Comment