நீர்கொழும்பு
கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் தோப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கமா காளி அம்மன் கோயிலில்
தீ சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (7) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்
காரணமாக ஆலயத்தின் அறையில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் சாரிகள், சிலைகள், படங்கள், புத்தகங்கள்
மற்றும் ஆவணங்கள் முழுமையாக தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம்
தொடர்பாக கோயில் குருக்களின் மனைவியினால் கொச்சிக்கடை
பொலிஸ் நிலையத்தில முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில்
குருக்களின் மனைவி திருமதி ஜெயந்தி இது தொடர்பாக தெரிவிக்கையில்,
இன்று
கோயிலில் பூஜை இடம்பெற்று இரவு 7 மணியளவில் முடிவடைந்தது. அதன் பின்னர் நான் கோயிலுக்கு
அருகில் உள்ள எனது தயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டு 15 நிமிடத்தில் திரும்பி வந்து
பார்த்தபோது கோயில் அறையினுள் தீப்பற்றி எரிந்து
கொண்டிருந்தது. உடனே நானும் எனது மகனும் தீயை அணைத்தோம். ஆயினும், ஆலயத்தின் அறையில்
வைக்கப்பட்டிருந்த அம்மனின் சாரிகள், சிலைகள், படங்கள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள்
முழுமையாக தீயினால் எரிந்து போய்விட்டன. அந்த அறையில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடையாது.
இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.
சம்பவம்
தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment