பிரதி
அமைச்சர் நிமல் லான்ஸாவின் தலைமையில் நீர்கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட துரித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
வெற்றி அளித்துள்ளமையை அடுத்து இதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கூறல் வழங்குதலும்,
வேலைத்திட்டத்தின் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை (9) முற்பகல் நீர்கொழும்பு மாநகர சபையில் நடைபெற்றது.
பிரதி
அமைச்சர் நிமல் லான்ஸாவின் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் துணை ஆயர் இமானுவல் பெர்னாந்து, மல்வத்தை பங்குத் தந்தை ரவீன்
சந்ரசிறி பெரேரா, நீர்கொழும்பு முன்னாள் மேயர் அன்ரனி ஜயவீர, நீர்கொழும்பு மாநகர ஆணையாளர்
சுகத் குமார, நீர்கொழும்பு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நிலந்தி பத்திரண, நீர்கொழும்பு
வலய கல்விப் பணிப்பாளர் அன்ரனி பெர்னாந்து, முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், பொது
சுகாதார பிரிவின் அதிகாரிகள், நீர்கொழும்பு பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்,
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவில் துரித டெங்கு
ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட விதம்
தொடர்பாக பொது சுகாதார பிரவு அதிகாரி ஒருவரினால்
ஒனிப்பட காட்சிகள் மூலமாக விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர்
பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா, துணை ஆயர் இமானுவல்
பெர்னாந்து ஆகியோர் உரை நிகழ்த்தி;னர்.
நாட்டில்
அதிக எண்ணிக்கையான டெங்கு நோயாளிகள் நீர்கொழும்பில் பதிவாகியிருந்த நிலையில் துரித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் மூலமாக
கடந்த ஒரு மாத காலத்தில் அதனை 80 சத வீதமாக
குறைக்க முடிந்ததாக பிரதி அமைச்சர் நிமல் லான்ஸா அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
துரித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்ட அறிக்கை பொது சுகாதார
பிரிவின் அதிகாரிகளிடம் பிரதி அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.
நிகழ்வின்
இறுதியில் துரித டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியவர்கள்
நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
செய்தியும் படங்களும். – எம். இஸட். ஷாஜஹான்

No comments:
Post a Comment