Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, June 15, 2018

நீர்கொழும்பு போருதொட்ட கடல்பகுதியில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவரை காணவில்லை. இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு


 நீர்கொழும்பு போருதொட்ட கடல்பகுதியில் நீராடச் சென்ற ஐந்து மாணவர்களில் இருவரை காணவில்லை. இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டு  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று  சனிக்கிழமை பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு தளுவகொட்டுவ சாந்த ஹானா மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் 16 வயதுடைய எவவடுகே ஐஸ் சத்துரங்க, மார்க் செனோல் என்ற இரு மாணவர்களே கடலில் மூழ்கி காணாமல் போனவர்களாவர்.

  காணாமல் போன மாணவர்கள் இருவரும் நீர்கொழும்பு தளுவகொட்டுவை பிரதேசத்தில் வசிப்பவர்களாவர். இருவரையும் தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகளும் மீனவர்களும் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,





தளுவகொட்டுவ சாந்த ஹானா மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் ஐவர் இன்று முற்பகல் 10 மணியளவில் போருதொட்ட கடல்பகுதிக்கு வநதுள்ளனர். அவர்களில் இருவர் முஸ்லிம் மாணவர்களாவர். முஸ்லிம் மாணவர்களுடைய வீட்டுக்கு வந்த நண்பர்கள் மூவரும் முஸ்லிம் மாணவர்களுடன் இணைந்து கடற்கரைக்கு வந்துள்ளனர்.









இந்நிலையில்  முற்பகல் பதினொரு மணியளவில் ஒரு மாணவர் கரையில் இருக்க ஏனைய நால்வரும் கடலில் நீராடியுள்ளனர். ஒரு மணியளவில் அந்த நால்வரில் இருவர் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை காப்பாற்ற முஸ்லிம் மாணவர்கள் இருவர் முயன்றபோதும் அவர்களால் முடியாமல் போயுள்ளது. அந்த மாணவர்கள் இருவரையும் அங்குள்ளவர்கள் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களை படகொன்றில் சென்று பிரதேசவாசிகளும் மீனவர்களும்  இணைந்து வலைகளை விரித்து தேடியபோதும் சடலம் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கடற்படை மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

No comments:

Post a Comment