Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, August 15, 2018

நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் திறமைக் கண்காட்சி - 2018



நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்  சுய தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட  கேக் அலங்காரம், சமையல், கை எம்பிராய்டரி மற்றும் ஆடை தயாரித்தல் ஆகிய பாட நெறிகளை நிறைவு செய்த மாணவிகளின் திறமைக் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் கடந்த சனி மற்றும் ஞாயிறு (11.08.2018 - 12.08.2018) தினங்களில் நீர்கொழும்பு  ஜாபிர் நினைவக மண்டபத்தில் நடைப்பெற்றது.
நீர்கொழும்பு அல் - ஹிலால் மத்திய கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தைச் சேர்ந்த  அனுபவம் மற்றும் தகுதிவாய்ந்த  பயிற்றுவிப்பாளர்களைக் இந்த பயிற்சி நெறி நடத்தப்பட்டது
.

 6 மாத காலமாக இடம்பெற்ற இப் பாட நெறி கடந்த ஞாயிற்றுக்கிழமை  (12-8-2018) நிறைவடைந்தது.





கேக் அலங்காரம், சமையல், கை எம்பிராய்டரி மற்றும் ஆடை தயாரித்தல் போன்ற பாட நெறியில் மாணவிகள் தத்தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர். பயிற்சி நெறியில் கலந்து கொண்ட 50 மாணவிகளில் 23 பேருக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  

      News -    
 Musadeek Mujeeb



No comments:

Post a Comment