டெங்கு காய்ச்சலினால்
பாதிக்கப்பட்டு நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலை மாணவி ஒருவர் மரணமாகியுள்ளார்.
கட்டானை, அக்கரபனஹ,
சமுர்திகம பிரதேசத்தில் வசிக்கும் சாமிக்கா
மினோலி என்ற 11 வயது மாணவியே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இறந்தவராவார். இவர் தரம் ஆறில் கல்வி கற்பவராவார்.
கடந்த 11 தினங்களில் நீர்கொழும்பு கட்டானை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள
இரண்டாவது டெங்கு மரணம் இதுவாகும்.
டெங்கினால் மரணமடைந்த
மாணவி அவர்களின் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளையாவார். பெற்றோர் திருமணம் செய்து எட்டு வருடங்களின் பின்னர் சாமிக்கா மினோலி பிறந்துள்ளார். இந்த மாதம் மூன்றாம் திகதி டெங்கு
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் கடந்த 5 ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (8) மரணமாகியுள்ளார்.
இந்த சிறுமியின் வீட்டுக்கு
அண்மையில் அமைந்துள்ள கந்தசூரிகம பிரதேசத்தில் வசிக்கும் கட்டுநாயக்க ரோமன் கத்தோலிக்க
மகா வித்தியாலயத்தின் அதிபர் கே.டி.சி. தமயந்தி (51 வயது) கடந்த மாதம் 31 ஆம் திகதி
(31-7-2019) மரணமானார். இவரின் மகளும் டெங்கினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்
பெற்றார்.
தற்போது சமுர்திகம, கந்தசூரிகம ஆகிய பிரதேசங்களில் 200 பேர்
வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் விசேட டெங்கு மருத்துவ மேலாண்மை
மையம் (வார்ட்) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment