புனித நோன்புப் பெருநாளை நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்
மக்கள் இன்று புதன்கிழமை அமைதியான முறையில் கொண்டாடினர்.
நீர்கொழும்பு பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாள்
தொழுகையும் பெருநாள் பிரசங்கமும் இடம்பெற்றது.
நீர்கொழும்பு அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலில் மௌலவி
தாஹிர் அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகையும் விசேட பிரசங்கமும் இடம்பெற்றது. இதில் நீர்கொழும்பு அஹ்மதி முஸ்லிம்களுடன் இணைந்து அஹ்மதியா பள்ளிவாசலில் தற்காலிகமாக தங்கியுள்ள 300 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் அஹ்மதி முஸ்லிம்கள்
பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும்
நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை அடுத்து பாதுகாப்பான வகையில் பள்ளிவாசலில் தங்க
வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
No comments:
Post a Comment