இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மாதர் அணியினர்
(LAJNA IMAILLAH) வருடாந்தம் நடத்தும் பொருட் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று சனிக்கிழமை
(20-4-2019) நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள அஹ்மதியா முஸ்லிம் பள்ளிவாசலின்
(MASJID FAZL) ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மாணவிகளின் பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் ஆடை வகைகள், உணவு வகைகள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் குறைந்த விலையில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன், வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்க ஹோமியோபதி
வைத்தியசாலையின் உதவியுடன் வைத்தியர் திருமதி
பரீனா பேகம் தலைமையில் அங்கு நோயாளிகளுக்கு இலவசாமாக ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த
அஹ்மதியா ஜமாஅத்தின் கிளை அமைப்புகளைச் சேர்ந்த பெண்களும் சிறுவர் சிறுமிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment