நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் பெரியமுல்லை
பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார்
நிறுவனமொன்றுக்கு சொந்தமான நான்கு லொறிகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ வைப்பு சம்பவம் நேற்று புதன்கிழமை (21) அதிகாலை
2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நீர்கொழும்பு
பொலிஸார் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் சிசிரிவி
காணொளி காட்சிகளை ஆராய்ந்து நீர்கொழும்பு கடற்கரை வீதியில் வசிக்கும் 41 வயதுடைய கமிது லக்மால் என்ற நபரை நேற்று (21) மாலை கைது செய்துள்ளனர்.
தீ வைப்பு
சம்பவம் காரணமாக டொயட்டா ரக வாகனம் ஒன்று, மஹேந்திர ரக வாகனம் ஒன்று மற்றும் டிமோ பட்டா
ரக வாகனம் இரண்டு ஆகியன பகுதி அளவில் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று மன்றில் ஆஜர்
செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment