Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, November 29, 2019

ஒளி விழா நிகழ்வில் நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு


 நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் வத்தளை, மாபொல நகர சபை உறுப்பினருமான எஸ். சசிகுமார் அன்பளிப்பு  செய்தார்.
 இந்நிகழ்வு இன்று வியாழக்கிழமை (28) கல்லூரியின் பிரதான மண்டபத்தில்  பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான்  தலைமையில் நடைபெற்றது.
 முன்னாள்  அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்;டில் இதற்கான நிதி வருட ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

பாடசாலையில் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு வத்தளை, மாபொல நகர சபை உறுப்பினர் எஸ். சசிகுமார்  பாடசாலைக்கு தேவையான தொலைக்காட்சி பெட்டி, லெப் டொப் , மல்டி மீடியா உபகரணம், டி.வி.டி உபகரணம் என்பவற்றை  அன்பளிப்பு செய்தார்.  அத்துடன் அவர் அங்கு உரையாற்றினார்.
நிகழ்வில் வெலிஹேன நல்லாயன் கன்னியர்  மடத்தின் பொறுப்பாளர் அருட் சகோதரி  சுசிலா மேரியன் பிரதம அதிதியாகவும்  , அருட் சகோதரி எம்.சி. பெர்னாந்து புள்ளே கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். 









அத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஜெயச்சந்;திரன்,  ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட கிறிஸ்தவ விவகார செயலாளர் அன்டனி ராஜா, மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழச்சிகள் இடம்பெற்றதுடன், சகல மாணவர்களுக்கும் பாடசாலை புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்கள்  அன்பளிப்புச் செய்யப்பட்டன.
 பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான்   தலைமை உரை நிகழ்த்தினார்.  உப அதிபர் ஏ. இ. கே. பெர்னாந்து புள்ளே நன்றி உரை நிகழ்த்தினார். ஆசிரியை துன்யா டயனித்தா, ஆசிரியர் எம்.ஆர். பிலீசியன் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.






Principal M.Z.Shajahan






                                                               P. Sasikumar




































No comments:

Post a Comment