நகரை
தூய்மையாக்கி அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) நீர்கொழும்பு
வைத்தியசாலையின் முன்பாக உள்ள மதிலில் சுவர் ஓவியங்களை நீர்கொழும்பு நகரைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் வரைந்தனர்.
நீர்கொழம்பு
மேயர் தயான் லான்ஸா, நீர்கொழும்பு சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குகேஸ்வர குருக்கள், மௌலவி சல்மான் உட்பட இளைஞர்
யுவதிகள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் சர்வமத் தலைவர்கள் ஆசி வழங்கியதோடு
இந்த வேலைத்திட்டம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து
சுவர் ஓவியங்களை இளைஞர் யுவதிகள் உற்சாகமாக வரைந்தனர்.
சமாதானத்தை
வலியுறுத்தும் சித்திரங்களை சுவர்களில் தீட்டுமாறு அங்கு உரையாற்றுகையில் நீர்கொழும்பு
மேயர் தயான் லான்ஸா இளைஞர்களை கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment