Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, December 8, 2019

நீர்கொழும்பு பலகத்துறை கடற்பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பலி


நீர்கொழும்பு பலகத்துறை  கடற்பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி பரிதாபகரமாக மரணமாகியள்ளார். இவருடன் நீராடச் சென்ற மேலும் இரு மாணவர்கள் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை  (6) மாலை இடம் பெற்றதுடன் நீரில் மூழ்கி காணாமல்போன மாணவன்; அடுத்த நாள் சனிக்கிழமை (7) காலை அதே பிரதேசத்தின் கடற் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 குருணாகல மல்லகடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த  சகீர் முஹம்மத் சல்மான் (13 வயது) என்ற மாணவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
முஹம்மத் யாக்கூப் (14 வயது),  முஹம்மத் ரிசார் (15 வயது) என்ற இரு சிறுவர்களே பிரதேசவாசிகள் மற்றும்; மீனவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
டுபாய்க்கு வேலைவாய்ப்பிற்காகச் செல்லும் உறவினர் ஒருவரை விமான நிலையத்திற்கு வழியனுப்புவதற்காக வருகைத் தந்த மரணமான சிறுவன் மற்;றும் உறவினர்கள் விமான நிலையம் செல்வதற்கான நேரம் வரும் வரையில்  பலகத்துறையில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
 இதற்கிடையில் சம்பவத்தில் மரணமான சிறுவன் மற்றைய இரு சிறுவர்களுடன் பலகத்துறை  கடற்பகுதியில் நீராடச் சென்று கடற்கரையில் இருந்த கல்லொன்றின் மேல் நின்றுள்ளனர். இதன்போது குறித்த சிறுவன் கடலில் விழுந்துள்ளார். ஏனைய இரு சிறுவர்களும் அவரை காப்பாற்ற முயற்சி செய்யும்போது அவர்களும் கடலில் விழுந்துள்ள அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து பிரதேசவாசிகள் மற்றம் மீனவர்கள் இணைந்து சிறுவர்கள் இருவரை காப்பாற்றியுள்ள போதும் முதலில் மூழ்கிய சிறுவன் காணாமல் போயுள்ள நிலையில் அடுத்த நாள்  கற்பறைகளுக்குள் சிக்குண்ட  நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 சம்பவத்தில் இறந்த சிறுவனின் மரண விசாரளை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்றது. திடீர் மரண விசாரணை அதிகாரி  சந்த்;ரசிறி மாரசிங்க மரண விசாரணை மேற்கொண்டு  நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என அறிவித்துள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment