எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) சனிக்கிழமை 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
நீர்கொழம்பு சிறைச்சாலையில் பல மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய
தேசியக் கட்;சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்
நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித்
தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து , ஐக்கிய
தேசியக் கட்;சியின் சிலாபம் அமைப்பாளரும் புத்தளம்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரை சந்தித்து சுகநலம் விசாரிப்பதற்காகவே
சஜித் பிரேமதாச சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன,
ஹெக்கடர் அப்புஹாமி, அசோக் அபேசிங்க ஆகியோரும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.
சிறைச்சாலையில் இருந்து வெளியேறும்போது ஊடகவியலாளர்களின்
கேள்விகளுக்கு சஜித் பிரேமதாச பதிலளித்தார்.
எதிர்கட்சித் தலைவர் பதவி எனக்கு கிடைப்பதில் பிரச்சினை
கிடையாது பொறுத்திருந்து பாருங்கள். எமது கட்சி உறுப்பினர்களிடையே பிளவுகள் கிடையாது.
எதிர்வரும் பொதுத் தேர்தலை நாங்கள் சரியான விதத்தில் எதிர் கொண்டால் கட்சி வெற்றி பெறுவதில்
கடினம் ஏதும் கிடையாது என்று தெரிவித்தார்
புத்தளம்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்கடர் அப்புஹாமி தெரிவிக்கையில்,
அரசாங்கம் எதிர்கட்சி உறுப்பினர்களை அடக்குவதற்கு
முயற்சி செய்கிறது. அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை
கைப்பற்ற முயற்சி செய்கிறது. எமது தரப்பு அரசியல்வாதிகளை சிறையிலடைத்து பயமுறுத்த முடியாது.
எமது கட்சி உறுப்பினர்களிடையே பிளவுகள் கிடையாது. கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளது
என்று தெரிவித்தார்.
பாராளுமனற் உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஊடகவியலாளர்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
கட்சித் தலைமை பதவி தொடர்பில் கலந்துரையாடப்பட்டு
விரைவில் நல்ல தீர்மாhனம் ஒன்று எடுக்கப்படும். எமது கட்சியுடன் இணைந்து செயற்பட்ட
பாட்டளி சம்பிக்க ரணவக்க ஒரு பௌத்த தலைவராவார். அத்துடன் அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்
பதவியை சிறப்பாக மேற்கொண்டார். அவருக்கெதிராக கொலை குற்றச்சாட்டு, களவுகுற்றசாட்டு,
ஊழல் குற்றச்சாட்டு எதுவும் கிடையாது. அத்துடன் அவர் ராஜபக்ஷ ஆட்சியிலும் அமைச்சராக
பணியாற்றியவர். அபபோதும் அவருக்கு எதிராக குற்றசசாட்டுக்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போது
அவர் கைது செய்ப்பட்டுள்ளார். இது எதிர்கட்சியை பலயீனப்படுத்தும் செயற்பாடாகும் என்று
தெரிவித்தார்.
No comments:
Post a Comment