Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, January 25, 2020

நூற்றாண்டு விழாவையிட்டு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கத்தால் நீச்சல் தடாகம்


நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு 100 ஆண்டுகள்  பூர்த்தி அடைவதையிட்டு (1922-2022) நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் கல்லூரிக்கு சர்வதேச தரத்திற்கு நிகரான வகையில் நீச்சல் தடாகம்  மற்றும் அதனோடு இணைந்த உடற்பயிற்சி கூடம் (Swimming Pool and Gymnasium)  ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை (24-1-2020) இரவு பழைய
மாணவர் சங்க கட்டடத்தில்  கல்லூரியின் அதிபர்  அருட் தந்தை மைக்கல்; த வாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் அன்டன் பெர்னாந்து, உப தலைவர் பிரதீப் பீரிஸ், செயலாளர் அன்டன் குணவர்தன, பொருளாளர்  சாமக்க பெர்னாந்து  மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





கல்லூரியின் அதிபர்  அருட் தந்தை மைக்கல் த வாஸ் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் , செயலாளர் ஆகியோர் நிர்மாணிக்கப்படவுள்ள  நீச்சல் தடாகம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
 கல்லூரியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் 70 முதல் 100 மில்லியன் ரூபா உத்தேச செலவில் நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், அயர் பாடசாலை மாணவர்கள், மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் நீச்சல் தடாகத்தை பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு  அமைய நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதால் போட்டிகளை நடத்துவதற்கு நீச்சல் தடாகத்தை பயன்னபடுத்தலாம் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment