நீர்கொழும்பு
பெரியமுல்லையில் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயொன்றை சுட்டுக் கொலை செய்த வழக்கில் பிரதிவாதியாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை
926) விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட ஓய்வு பெற்ற பொலிஸ் அத்தியட்சகரை நீர்கொழும்பு பிரதான நீதவான்
ரஜீந்ரா ஜயசூரிய கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய நேற்று வெள்ளிக்கிழமை
(29) உத்தரவிட்டார்.
ஓய்வு
பெற்ற பொலிஸ் அத்தியட்சகர் கிளமன்ட் பெர்னாந்து
என்ற சந்தேக நபரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார்.
இவர்
சம்பவம் இடம்பெற்ற கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அன்றைய தினம் நீர்கொழும்பு
மேலதிக நீதவாள் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது தலா 5 இலட்சம் ரூபா கொண்ட இரண்டு
பேர்களின் சரீரப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டார்.
இந்நிலையிலேயே
பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் விடுக்கப்பட்ட முறையீட்டை அடுத்து பிணை இரத்து செய்யப்பட்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் முழு அறிக்கை
கிடைக்கும் வரை (நேற்று0 விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டப்பாட்டார்.
இதனைத்
தொடர்ந்து இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (29)
நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
நாயின்
உரிமையாளரான பிரிட்டோ பெர்னாந்துவின் சார்பில் சட்டத்தரணி அசான் பெர்னாந்து வழக்கில் ஆஜரானார்.
இன்றைய
தினம் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளின் அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா நீதிமன்றில் ஆஜராகி பொலிஸ்
விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த குறைபாடுகள் எவை என அவர் மன்றில் தெரிவிக்கவில்லை.
விசாரணையை
தொடர்ந்து முறைப்பாட்டாளர்களுக்கு எந்தவித அழுத்தங்களையும் செய்யக்கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டு
சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது.
இதேவேளை,
இரசாயண பகுப்பாய்வு அறிக்கை கிடைத்த பின்னர் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை
இரத்துச் செய்வதா இல்லையா? என மன்றில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்த
வழக்கு மீண்டும் ஜுலை மாதம் ஆறாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீர்கொழும்பு
பெரியமுல்லை, சாந்த அந்தோனியார் வீதியில் அமைந்துள்ள பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும் , காணாமல் போனோர்
குடும்ப அங்கத்தவர் ஒன்றியத்தின் தலைவருமான பிரிட்டோ பெர்னாந்துவின் வீட்டில் செல்லப்
பிராணியாக வளர்க்கப்பட்ட மெக்ஸ் (max) என்று செல்லமாக அழைக்கப்படும் வளர்ப்பு நாயே
இந்த மாதம் ஏழாம் திகதி வெசாக் தினத்தன்று
காலை 6.15 மணியளவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment