Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, January 13, 2011

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு (Dialysis Machine) அன்பளிப்பு



நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலிய கிளையினர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு மருத்துவ இயந்திரங்ளை 12-1-2011 அன்று அன்பளிப்பு செய்தனர்..
சிறு நீரக நோயாளிகளின் இரத்தத்தை சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு மருத்துவ இயந்திரங்களையும்  (Dialysis Machine) பழைய மாணவர் சங்கத்தின் தலைவர்  அஜித் வீரசிங்க மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் அமல் அர்சத சில்வாவிடம் கையளித்தார். இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் உப லைவரும் மாநகர சபை உறுப்பினருமான பிரதீப் பீரிஸ்,வைத்திய அதிகாரி  சனத் அல்கமுவ,  பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

1 comment:

  1. இன்ஷா அல்லாஹ் 14/01/2011 வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பிராந்திய இஜ்திமா பலகத்துரை ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. அனைத்து நீர்கொழும்பு வாழ் முஸ்லிம்களையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கிறோம்.

    ReplyDelete