நீர்கொழும்பு மாநகர
சபையின் பிரதான வாயில் முன்பாக இன்று முற்பகல் ஆயதங்களுடன் நடமாடிய எட்டு பேரை
கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு மாநகர
சபையில் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்
ரொயிஸ் விஜித்த பெர்னர்ணான்டோவினால் கொண்டு வரப்படவிருந்த பிரேரணை ஒன்றுக்கு
எதிர்ப்பு தெரிவி;த்து, மாநகர நகர சபையில் கொந்தராத்து அடிப்படையில்
தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சிற்றூழியர்கள எதிர்ப்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில் மாநகர சபையின் பிரதான வாயில்
முன்பாக முச்சகக்ர வண்டியொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் இருப்பதாக
நகர சபையின் மண்டபத்துக்கு பொறுப்பான
உத்தியோகத்தருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அவர் ஆர்ப்பாட்டத்திற்கு
பாதுகாப்பு வழங்கிக்க கொண்டிருந்த பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து, பொலிஸார்
முச்சக்கர வண்டியை சோதனை செய்துள்ளனர். இதன் போது அதில் கத்தி, வாள் மற்றும் தடிகள்
என்பன இருந்துள்ளதை அடுத்து அங்கிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆளும் தரப்பைச்
சேர்ந்தமாநகர சபை உறுப்பினர்கள் இருவரின் பாதுகாப்புக்காக இந்த ஆயுதங்களை கொண்டு
வந்ததாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொலிஸாரிடம் வாக்மூலமளித்துள்ளனர்.
இச்சம்பவம் தொட்ரபாக
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment