கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள்
இன்று முதல் (06.08.2012) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இந்த பரீட்சையில் 2 லட்சத்து 77
ஆயிரத்து 671
பரீட்சாத்திரிகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜகத்
புஷ்பகுமார தெரிவித்தார்.
அத்துடன் 2 லட்சத்து 36 ஆயிரத்து 25
படசாலை பரீட்சாத்திரிகளும்,தனிப்பட்ட பரீட்சாத்திரிகளுள் 15 ஆயிரத்து 239 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு
அமையவும், 41 ஆயிரத்து 323 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமையவும் பரீட்சைக்கு
தோற்றவுள்ளனர்.
மேலும், நாடு முழுவதும் 2 ஆயிரத்து 93
பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 289 இணைப்பு நிலையங்களினூடாக பரீட்சைகள்
கண்காணிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 12 ஆயிரத்து 500 ற்கு
மேற்பட்ட பரீட்சை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்
நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரில் உள்ள பாடசலைகளில்
சிலவற்றில் உயர்தரப் பரீட்சை எழுதுவதற்காக
மாணவர்கள் செல்வதை படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment