Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, August 8, 2012

களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்டு வரும் சுற்றாடல்பாதிப்புக்கள் தொடர்பாக திறந்த கலந்துரையாடல்


 நீர்கொழும்பு களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடோலான கடற்தாவர அளிப்பு . சட்ட விரோதமாக களப்பை மண்ணிட்டு நிரப்புதல் மற்றும் குப்பை கூலங்களை களப்பினில் இடல், இவைகளால் மீனவர்களுக்கும் சுற்றாடலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக
திறந்த கலந்துரையாடலும்

ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமும் இன்று பிற்பகல் (7-8-2012) இடம்பெற்றது.

நீர்கொழும்பு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பை சேர்ந்த மிலீனா குமாரி, நீர்கொழும்பு சுற்றாடல் ஒன்றியத்தின் தலைவர் ரமேஸ் நிலங்க, அகில இலங்கை மீனவ மக்கள் ஒன்றியத்தின் முக்கியஸ்த்தர் அருண ரொசாந்த. நீர்கொழும்பு களப்பு மீனவர்களின் பிரதிநிதி ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

பிரதேச அரசியல்வாதிகள் ஒருசிலரின் ஒத்துழைப்புடன் களப்புப் பகுதியில் சட்விரோதமாக மண்ணிட்டு நிரப்பப்பட்டு வீடுகள் மற்றும் ஹோட்டல்கள் கட்டப்படுவதாவும் இதன் காரணமாக  மீன்கள்; குறைந்து களப்பு மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவம் அங்கு உரையாற்றியோர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இங்கு  இது தொடர்பாக தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், விரைவில் ஊடகவியலாளர்களை நேரில் அழைத்துச் சென்று பாதிக்கப்பட்டுள்ள களப்புப் பிரதேசங்களை காண்பிப்பதென்று அங்கு தீர்மானிக்கப்பட்டது.










No comments:

Post a Comment