நீர்கொழும்பு மாநகர
சபை முன்றலில் இன்று முற்பகல் 9 மணிமுதல் 10 மணி வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நீர்பொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி
உறுப்பினர் ரொயிஸ் விஜித்த
பெர்னர்ணான்டோவினால் இன்று நடைபெற்ற மாதாந்த அமர்வின்
போது கொண்டு வரப்படவிருந்த பிரேரணை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவி;த்தே மாநகர நகர
சபையில் கொந்தராத்து அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 110 சிற்றூழியர்கள்
இந்த எதிர்ப்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சிற்றூழியர்கள்
வடிகான் துப்பரவு செய்தல், நுளம்பு மருந்து தெளித்தல், வீதிகளில் தார் இடல் போன்ற
வேலைத்திட்டங்களுக்காக ஆறு மாதங்களுக்கு செயற்படும் வகையில் தற்காலிகமாக
அமர்த்தப்பட்டுள்ளவர்களாவர்.
மேற்குறித்த
வேலைத்திட்டங்களை குறித்த காலப்பகுதியில் நிறைவு செய்யாமல், அந்த
வேலைத்திட்டங்களுக்காக தற்காலிகமாக அமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை ஓரிரண்டு தினங்கள்
வித்தியாசத்தில் மீண்டும் தொடர்ச்சியான முறையில் கடந்த ஏழு வருடகாலமாக நியமித்து
வந்துள்ளதாகவும் , மாகாண சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைய எதிர்;காலத்தில்; இந்த விடயம்
கணக்காய்வுக்கு உட்படுத்தபடலாம் என்பதனால் குறித்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு
வலியுறத்தியே மாநகர சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னர்ணான்டோவினால் இந்த
பிரேரணை இன்று முன்வைக்கப்பட இருந்ததது.
இதேவேளை, இன்று
நடைபெற்ற மாதாந்த அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மாநகர சபை உறுப்பினர் ரொயிஸ்
விஜித்த பெர்னர்ணான்டோ குறித்த பிரேரணையில் மாற்றங்கள் செய்து அடுத்த கூட்ட
அமர்வின் போது சமர்ப்பிப்பதாக சபை அமர்வின் போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment