வாழ்க்கை
முயற்சியாண்மை வியாபார கண்காட்சி -2012 என்ற மகுடத்தின் கீழ் இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு - கடோல்கலே விளையாட்டு மைதானத்தில்
கண்காட்சியும் விற்பனை சந்தையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
'ஊக்கத்துடன் முன்னேறுவோம்' என்ற தொனிப் பொருளில் வேர்ல்ட் விசன் லங்கா (World Vision Lanka)' நீர்கொழும்பு நகர
அபிவிருத்தி வேலைத்திட்டத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சியை பிரதி
அமைச்சர் சரத்குமார குணரட்ன ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில்
நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.அலவத்த, 'வேர்ல்ட் விசன் லங்கா' நீர்கொழும்பு நகர
அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முகாமையாளர் சஞ்சீவ ரொட்ரிகோ உட்பட பலர் கலந்து
கொண்டனர்.
இன்று சனிக்கிழமையும்
நாளை ஞாயிற்றுக்கிமையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் பிட்டிபனை, முன்;னக்கர, கடற்கரைத்
தெரு , சிறிவர்தனபுர ஆகிய பிரதேசங்களை
சேர்ந்த பெண்களின்; கைவினை பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.
நீர்கொழும்பு
மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவிற்கு இருபது இலட்சம் ரூபா பெறுமதியான டிரக்டர்
வண்டி ஒன்றும் 'வேர்ல்ட் விசன் லங்கா' நீர்கொழும்பு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தினரால் நீர்கொழும்பு மேயரிடம்
அன்பளிப்பாக ஒப்படைக்கப்பட்டது.
No comments:
Post a Comment