சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நிமல்லான்ஸா அமைப்பு 30 இலட்சம் ரூபா பெறுமதியான
சுய தொழிலுக்கு தேவையான உபகரணங்களை இன்று வழங்கியது.
நீர்கொழும்பு மீனவ பெண்கள் அமைப்பு, நிமல்லான்ஸா அமைப்பு ஆகியன இணைந்து
நடத்திய இந்நிகழ்வு நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொதுச் சந்தை முன்றலில்
இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேல்மாகாண உல்லாசப் பயணத்துறை, வீதி அபிவிருத்தி அமைச்சர்
நிமல்லான்ஸா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு
சுயதொலில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நீர்'கொழும்பு வலயக்கல்விக்
காரியாலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவினரால் நடத்தப்பட்ட அழக்கலை மற்றும்
சிகையலங்கார பாடநெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கும் சுயதொழில் ஈடுபட்டுள்ள வசதி
குறைந்த பெண்களுக்கும் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
தையல் இயந்திரங்கள்,சமையலறை உபகரணங்கள், துவிச்சக்கர வண்டிகள், இலக்டரிக்
அவன்கள், கேஸ் அடுப்புகள் , டெங்கு ஒழிப்பு பற்றீரியா மருந்து வகைகள் என்பன அங்கு
வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment