நபி பெருமானாரை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள
திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நகரில்
எதிர்ப்பு பேரணியும் கதவடைப்பும் இடம்பெறவுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்
பின்னர் நடைபெறவுள்ள இந்த பேரணியை நீர்கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஏற்பாடு
செய்துள்ளது.
எதிர்ப்பு பேரணி பெரியமுல்லை பெரிய
பள்ளிவாசலின் முன்பாக ஆரம்பமாகி நகர மத்தியில் அமைந்துள்ள மணிக் கூட்டு கோபுரம்
அருகே சென்று அங்கு விஷேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்மா தொழுகை இடம்பெற்ற பின்னர்
பெரியமுல்லை பெரிய பள்ளிவாசலின் முன்பாக முஸ்லிம்கள் ஒன்று கூடி இந்த அமைதிப்
பேரணி இடம்பெறவுள்ளது.
இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை;
ஜும்மா தொழுகையின்
பின்னர் நீர்கொழும்பு நகரில சகல முஸ்லிம்
கடைகளும் மூடப்படவுள்ளன.
No comments:
Post a Comment