தாகொன்ன பிரதேசத்தில் சட்ட விரோதமாக
கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத கசிப்பு
மற்றும் கசிப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட
உபகரணங்களையும் கைபற்றியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்க வங்கியொன்றுக்ககு சொந்தமான
இடத்தில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத கட்டிடமொன்றின் மறைவிடத்தில் சட்ட விரோதமாக
கசிப்பு தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.
34560 டிரேம் கோடா 35 ஸ்பரிட் போத்தல்கள் பரல்கள் கசிப்பு
தயாரிக்கப்பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர்
பிரியநாத் குமார போலி தெரிவித்தார்.
நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி
அல்லவவின் ஆலோசனையின்படி போதைப் ஒழிப்புப் பிரிவினர் சந்தேக நபரை கைது
செய்துள்ளனர்.
No comments:
Post a Comment