நீர்கொழும்பு
சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப் பொருளை மறைத்து
வைத்து கொண்டு செல்ல முற்பட்டபோது கைது செய்யப்பட்ட நபரை நீர்கொழும்பு மேலதிக
நீதவான் டப்ளியூ.கே. துலானி எஸ் வீரதுங்க எதிர்வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.
ஜா- எல
பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்று புதன் கிழமை பகல் வேளையில்
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினரான கைதி ஒருவருக்கு வழங்குவதற்காக
உணவுப் பார்ஸலை கொண்டு வந்துள்ளார்.
இதன் போது இவர் மேல் சந்தேகம் கொண்ட சிறைச்சாலை
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்த உணவுப் பொதியை சோதனை செய்த போது உணவுப் பொதியில்
ஒரு கிராமும் 60 மில்லிகிராமும் கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment