தடை செய்யப்பட்ட மாதங்களில்
பிடிக்கப்பட்ட சிங்கி இறால்களை கடலில் விடுவிக்குமாறு நீர்கொழும்பு
நீதவான் நீதிமன்றம் நேற்று
செவ்வாய்க்கிழமை (25) கடற்றொழில் நீரியல்
வளத்துறை திணைக்களத்தின் நீர்கொழும்பு
மாவட்ட அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
நீர்கொழும்பு - கெபுன்கொடை கடற்பகுதியில்
வலைகள் மூலம் கூண்டில்
அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 10 கிலோகிராம் நிறை
கொண்ட 40 ஆயிரம் ரூபா
பெறுமதியான 33 சிங்கி இறால்களே நீதிமன்ற உத்தரவின் பேரில் தூவ பிரதேசத்தில் ஆழமான கடற் பகுதியில் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டன.
இதற்கான உத்தரவை நீர்கொழும்பு மேலதிக நீதவான் பி. ஏம்.டி. பண்டார நேற்று
செவ்வாய்க்கிழமை உத்தரிவிட்டார்.
சிங்கி இறால்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பெப்ரவரி, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அவைகளை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகும்.
கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் நீர்கொழும்பு மாவட்ட அலுவலக உதவிப் பணிப்பாளர் ரஞ்சித்
பண்டாரவின் ஆலோசனையின் பேரில், உத்தியோகத்தரான
கடற்றொழில் வள உதவி முகாமையாளர் லசந்த
வீரவர்தன, பிரதேச கடற்றொழில் பரிசோதகர்களான ரி.சி.
நாணயக்கார, யூட் பெரேரா, துசித்த மாரசிங்க
ஆகியோர் நீர்கொழும்பு - கெபுன்கொடை கடற்பகுதியில் தேடுதல் நடத்தி 33 சிங்கி இறால்
நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் கைப்பற்றியிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து, சிங்கி இறால்கள் படகொன்றில் கொண்டு
செல்லப்பட்டு மாலை 5.30 மணியளவில் தூவ பிரதேசத்தில் ஆழமான கடற் பகுதியில் அதிகாரிகளால்
கடலில் விடுவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment