Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, February 28, 2014

நீர்கொழும்பு நகை கடையில் இரண்டு கோடி ரூபா கொள்ளைச் சம்பவம்; மேலும் ஒரு சந்தேக நபர் காலியில் கைது

நீர்கொழும்பு  பிரதான வீதியில் அமைந்துள்ள நகை  கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று முகவர் நிலையத்தில் துப்பாக்கி முனையில்)   இரண்டு கோடிக்கு ரூபாவுக்கு மேற்பட்ட  பணத்தை  கொள்ளையி;ட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பி;ரிவு பொலிஸார் தெரிவித்தனர்.


நீர்கொழும்பு , கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கெசீனா என்பவரே பெரும் கைது செய்யப்பட்டுள்ளவராவார். சுந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் காலி நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக நீர்;கொழும்பு தேர்தல் தொகுதியின்  ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரும்> நீர்;கொழும்பு  மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மேல் மாகாண சபையின் கம்பாஹா மாவட்ட வேட்பாளருமான ரொயிஸ் விஜித்த பொர்னாந்து  கடந்த  சனிக்கிழமை (22) காhலை கைது செய்யப்பட்டார். இவர் தற்போது மூன்று மாத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு , பெரியமுல்லையைச் செர்ந்த முஹம்மத் இர்சாத் மற்றும் கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்து சாமதின் கொஸ்தா ஆகியோரே கைது செய்யப்பட்டள்ள ஏனைய இரு சந்தேக நபர்களுமாவர். இவர்கள் இருவரும் ஒNh வகுப்பில் கல்வி கற்ற நண்பர்களாவர்.

 கடந்த 17 ஆம் திகதி பிற்பகல் 1-35 மணியளவில் நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள  பிரபல   நகை கடை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் ('ஜுவல் லங்கா) இத்துணிகர  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

  
 கொள்ளைச் சம்பவம்  இடம்பெற்ற அன்று (17) குறித்த வர்த்தக நிலையத்தில்  வியாபார நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டிருந்த போது> ஹெல்மட் மற்றும் ஜாக்கட் அணிந்த இரண்டு பேர்  கடையில் நுழைந்து நகை கடையின் காவலாளியை  முதலில் தாக்கியுள்ளனர்;. பின்னர் வர்த்தக நிலையத்தின்  உரிமையாளரையும் கடையிலிருந்தவர்களையும்  ஒருவர்  துப்பாக்கி முனையில் அச்சுறுத்த மற்றையவர் பணத்தை கொள்ளையிட்டுள்ளார்.  அதன் பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.


No comments:

Post a Comment