உடைந்து விழும் அபாயத்தை
எதிர்நோக்கியுள்ள நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் ஏழு மாடிக் கட்டடத்தை
புனரமைப்பு செய்வதற்கும் தற்காலிக வார்ட்டுக்களை அமைப்பதற்கும் ஏனைய
செலவினங்களுக்குமாக 500 மில்லின் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதாக
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை
(11) மாலை விஜயம் செய்து வைத்தியசாலையின்
கட்டடத்தையும், வைத்தியசாலை வார்டுகளையும்
பார்வையிட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையடலின் போதே அமைச்சர் மேற்சொன்னவாறு
தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர்
அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்ததாவது,
வைத்தியசாலையின் ஏழு மாடிக்
கட்டடத்தை புனரமைப்பு செய்வதற்கு 300 மில்லின் ரூபாவும், தற்காலிக வார்டுக்களை
அமைப்பதற்கும் ஏனைய செலவினங்களுக்குமாக 200 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நிதியை வழங்குவதற்கு
நான் தீர்மானித்துள்ளேன். வைத்தியசாலையின் புனரமைப்பு வேலைகளுக்கு வைத்தியர் லக்குமாரை
நியமிக்கிறேன். நான் அதிகார பரவலாக்கத்தை
விரும்புபவன். எனவே, மாகாண சபையின் கீழ்
உள்ள இந்த வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதை தனிப்பட்ட
முறையில் நான் விரும்பவி;ல்லை என்றார்.
இந்த நிகழ்வின் போது , பிரதி அமைச்சர்
சுதர்சனி பெர்னாந்து புள்ளே. மேல் மாகாண சுகாதார அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச, மேல் மாகாண அமைச்சர்
நிமல் லான்ஸா, மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரொய்ஸ் பெர்னாந்து, சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து, வைத்தியசாலையின்
வைத்திய அதிகாரி சம்பா அளுத் வீர, சுகாதார அமைச்சின்
அதிகாரிகள் , சர்வ மதத் தலைவர்கள், வைத்தியர்கள் , வைத்தியசாலை
உத்தியோகத்தர்கள் நீர்கொழும்பு
வைத்தியசாலையை பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
வைத்தியசாலையில் தற்போது
எழுந்துள்ள இக்கட்டான நிலைமையை சமாளிப்பதற்கும் , நோயாளிகளுக்கு சிறந்த
சேவையை வழங்குவதற்கும் வைத்தியசாலை நிருவாகம் எடுத்துள்ள திட்டங்கள் தொடர்பாகவும், தற்காலிகமாக
கட்டப்படவுள்ள வார்ட் தொடர்பாகவும் அதிகாரிகளால் அங்கு விளக்கமளிக்கப்பட்டன.



No comments:
Post a Comment