Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, June 9, 2015

பத்து இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத கசிப்பு கைப்பற்றல்: சந்தேக நபர்கள் இருவர் தப்பியோட்டம்

கொச்சிக்கடை, ஓவிட்டியாவத்தை பிரதேசத்தில் மாஓயா ஆற்றுக்கு அண்மையில் காட்டுப் பகுதியில் இரகசியமான முறையில் இயங்கி வந்த  கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார்  அங்கிருந்து பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கோடா கிராம்ஸ்களையும் கசிப்பு பெரல்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவர் தப்பியோடியுள்ளதாகவும் நீர்கொழும்பு பிராந்திய  குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சுற்றிவளைப்பு நேற்று திங்கட்கிழமை (8) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 48 ஆயிரத்து 300 கோடா கிராம்ஸ்களும், 23 கசிப்பு பெரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி பத்து இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடியுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு நிலையம் நீண்ட காலமாக இயங்கி வந்துள்ளதாகவும் பிராந்திய  குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் சத்துர சம்பத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் ஆலோசனையின் பேரில் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் சத்துர சம்பத் தலைமையிலான குழவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment