Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, June 7, 2015

கொம்போஸ்ட்' தயாரிப்பு காரணமாக துர்நாற்றம்: குரணை பிரதேசவாசிகள் நீர்கொழும்பு மாநகர சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 நீர்கொழும்பு மாநகர சபையினரால் குரணை மேஜர் ராஜ் விளையாட்டரங்கு அருகில் நடத்தப்பட்டு வரும் 'கொம்போஸ்ட்' தயாரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள துர்நாற்றம் மற்றும் அதிகரித்துள்ள கொசுத் தொல்லைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சனிக்கிழமை (6-6-2015) காலை பிரதேசவாசிகள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கொம்போஸ்ட் தயாரிப்பு நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எதிரப்பு கோசங்களை எழுப்பியதுடன் , எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.



இதுதொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவிடம்; வினவியபோதுகடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, உக்கி போகக்கூடிய கழிவுகள் 'கொம்போஸ்ட்' பசளை தயாரிப்புக்காக வருவது அதிகரித்துள்ளதாகவும். இதன் காரணமாக துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் அதிகரித்துள்ளதாகவும் துர்நாற்றம் ஏற்படுவதை குறைப்பதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்  அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.







No comments:

Post a Comment