தேர்தல் சட்டவிதிகளை
மீறி தேர்தல் பிரசார
நடவடிக்ககைகளுக்காக வாகனமொன்றில் கொண்டு
செல்லப்பட்ட ஒரு தொகை போஸ்டர்கள், கட்டவுட்.பௌத்த தேரர்கள் அணியும் ஆடை, அச்சிடப்பட்ட தொப்பிகள், ரீ சேர்ட், தண்ணீர் போத்ல்கள் ஆகியவற்றை
சீதுவை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (13)
கைப்பற்றியுள்ளனர்.
சீதுவை ரயில் குறுக்கு
வீதியொன்றில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது மேற்படி
பிரசாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தல் சட்டவிதிகளை மீறி பிரசார நடவடிக்ககைகளுக்காக கொண்டு செல்லப்பட்ட பிரசுரங்கள் மற்றும்
பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சீதுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.யு.டப்ளியு.எல்.
விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர்
சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு மேற்படி பிரசாரப் பொருட்களையம்
வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.





No comments:
Post a Comment