'கொலை செய்யப்பட்ட,
காணாமலாக்கப்பட்ட
ஊடகவியலாளர்களின் வாழ்க்கைக்கு கடைமையினை செய்வோம்' என்ற தொனிப் பொருளில் தேசிய நினைவு வேலைத்திட்டம் நேற்று வியாழக்கிழமை (13)
மாலை கொழும்பு கோட்டை
ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்றது.
ஊடக சுதந்திரத்திற்கான
செயற்பாட்டுக் குழு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த தர்மரத்தினம் சிவராம்,
லசன்த விக்ரமதுங்க,
பிரதீப் எக்கனெலிய கொட, நிமலராஜன் ஆகியோரின் புகைப்படங்கள் தாங்கிய டிஜிட்டல் பதாகையில் ஊடகவியலாளர்கள் மனித
உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கையொப்பமிட்;டனர்.
கொலை செய்யப்பட்ட,
காணாமலாக்கப்பட்ட
ஊடகவியலாளர்கள் தொடர்பாக நீதி நிலை
நாட்டப்பட வேண்டும். நடைபெறவுள்ள பொதுத்
தேர்தலில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் பாராளுமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என
அங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் இதுதொடர்பான துண்டுப்பிரசுர விநியோகமும்
அங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள்
பங்குபற்றினர்.











No comments:
Post a Comment