Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, August 17, 2015

நீர்கொழும்பில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு


  இன்று (17)  நடைபெறும் பொதுத்; தேர்தலுக்கான வாக்களிப்பு நீர்கொழும்பு தேர்தல்தொகுதியில் சுமுகமாக இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

நீர்கொழும்பு தேர்தல்தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேல் மாகாண சபை உறுப்பினர்  ரொயிஸ் பெர்னாந்து தில்லன்தூவ கனிஸ்ட வித்தியாலயத்திலும்,  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா கடற்கரைத் தெரு சாந்த ஜோசப்  வித்தியாலயத்திலும், யானைச் சின்னத்தில் போட்டியிடும் மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சாபி ரஹீம் அல்- ஹிலால் மத்தியக் கல்லூரியிலும் 
வாக்குகளை அளித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  கட்டானை தேர்தல் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான சுதர்சணி பெர்னாந்து புள்ளே வெலிஹேன சிங்கள கலவன் பாடசாலையில்  வாக்களித்தார்.




மேல் மாகாண சபை உறுப்பினர்  ரொயிஸ் பெர்னாந்து வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது.


எனது வெற்றி நிச்சயம். நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில்; அதிகூடிய  விருப்பு வாக்குகளை நான் பெறுவேன். பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் கூட அதிக விருப்புவாக்குகளுடன் நான் வெற்றி பெற்றேன். நீர்கொழும்பில் எனக்கு சவால் இல்லை. இந்த தேர்தல்   சுதந்திரத்தின் பின்னர் எமது நாட்டில்; இடம்பெறும் சுமுகமான தேர்தலாகும். மக்கள் சுதந்திரமாகச் சென்று வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை முழு நாட்டிலும் ஏற்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான  எமது கட்சி வெற்றிபெறும் என்றார்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களைக் காணலாம்.
























No comments:

Post a Comment