தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டைப்
சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவர் இன்று காலை (17)
வென்னப்புவ பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.
லுனுவில பிரதேசத்தை;ச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து இந்த
சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் வாக்கைப் பதிவு செய்ய ஒதுக்கியுள்ள
கார்ட்போர்ட் மறைவிடத்தில் வைத்து வாக்குச் சீட்டில் தனது வாக்கை பதிவு செய்த
பின்னர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து
கொண்டதை அங்கிருந்த வாக்களிப்பு
நிலைய அதிகாரிகள் அவதானித்தபோது,
அவர்;
வாக்குச் சீட்டை
புகைப்படம் எடுப்பதை கண்டுள்ளனர். இதனை அடுத்து அந்த நபர் பொலிஸாரிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு அவரது வாக்களிக்க இடமளிக்கப்பட்டதாகவும், வாக்களிப்பு நிலையத்தில்
சட்டவிரோத செயலை செய்தமைக்காக கைது செய்யப்பட்டதாகவும்,
சந்தேக நபரை மன்றில்
ஆஜர் செய்யவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment