Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Sunday, August 9, 2015

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் பாராளுமன்றத்தை அமைப்போம்' – நீரகொழும்பில் துண்டுப் பிரசுர விநியோகம்


'டக சுதந்திரத்தை பாதுகாக்கும்  பாராளுமன்றத்தை அமைப்போம்' என்ற தொனிப் பொருளில் அமைந்த துண்டுப்பிரசுர விநியோகம் நேற்று சனிக்கிழமை (8-8-2015)   நீர்கொழும்பில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு அமைப்பின் சார்பில் இந்த துண்டுப்பிரசுர விநியோகம் நீர்கொழும்பு நகர மத்தியிலும், வார இறுதிச் சந்தையிலும்  நீர்கொழும்பு பிரதேச ஊடகவியலாளர்களால் விநியோகிக்கப்பட்டது.

ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழவின் முக்கியஸ்த்தர் பிரடிகமகே உட்பட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றினர்.


கிடைத்துள்ள ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் உறுதியான பாராளுமன்றம் ஒன்றை அமைக்க செயற்படுவோம்,  ஊடக சுதந்திரத்தை படுபாதாளத்திற்கு கொண்டு சென்ற ஆட்சியாளர்கள் எவருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்ற பிரதான வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டிருந்த அந்த துண்டுப்பிரசுரத்தில் கடந்த ஆட்சியின்போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன் இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது


.



No comments:

Post a Comment