இரண்டு
கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை செவ்வாய்க்கிழமை
(17-11-2015) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு
பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தநதையான சாரதியாக தொழில் செய்யும்
ஒருவரே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபராவார். சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிலோகிராமும்
48 கிராமும் நிறையுடைய ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம்
தொடர்பாக மேலும் பொலிஸார் தெரிவித்ததாவது,
சந்தேக
நபர் கஞ்சாவை பஸ் வண்டியில் கொண்டு வருவதாக
பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை
அடுத்து
பன்னலையிலிருந்து வந்த பஸ் வண்டியை
கட்டானை தெல்கஸ் சந்தியில் வைத்து பொலிஸார்
நிறுத்தி சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment